Tuesday 10 November 2015

நானும் ஒரு துளி.......!!!


ஒரு துளி

நானும் ஒரு துளி.......!!!

என்ன பாக்குறிங்க... ஒரு துளி....!! பெயர் வித்தியாசமாக இருக்குதுட.....
ஆம்....

நாம் அனைவரும்... ஒரு துளியே... இந்த உலகத்தில்....!!!

இந்த உலக பூகோலதிலில் எத்தனை வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் இன்னும் பல உயரிகள்....

மனிதர்கள் பற்றி சொல்ல வேண்டுமானால்.... நிறம், உருவம், மொழி, இனம் எத்தனை வேறுபாடு..!!

இது ஏதுவ இருந்தாலும் இஸ்லாத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் சமம்.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்.
அல் குர்ஆன்: 49:13


இந்த வசனத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண், பெண்ணிலிருந்துதான் படைக்கப் பட்டனர் என்ற செய்தியை அறிந்து கொள்கிறோம். அதாவது மனிதர்கள் தொடர்ச்சியாக படைக்கப்படுவதற்கு தேவையான மரப்பணுக்களை ஆண் மற்றும் பெண்ணிடம் உற்பத்தி செய்து அதன் மூலம் மனித சமுதாயம் படைக்கப்படுகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம்.

ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா? 

குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது. (அல் குர்ஆன்: 86:5-7)

இந்த வசனத்தின் மூலம் மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்ற தகவலை சிந்தனையோடு பார்க்க வேண்டும் என்று மனிதனை இறைவன் தூண்டுகிறான். அவ்வாறு சிந்திக்கும் போது அற்பமான ஒரு துளி விந்துவில் அல்லாஹ் நிகழ்த்திய அற்புத ஆற்றல்களை புரிந்து கொண்டு, அந்த அல்லாஹ்வை ஏற்று, அவனை அஞ்சி வாழ்வதற்கு அது பெரிதும் துணை புரியும். 

மனிதன் மமதை கொண்டு, படைத்தவனை நம்ப மறுத்து கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என தான்தோன்றித்தனமாக நடந்து, அநியாயமும், அக்கிரமங்களும் செய்து கொண்டிருந்த போதுதான் இறைத்தூதர்களை அனுப்பி வைத்து, மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு தேவையான இது போன்ற தகவல்களை அவர்களுக்கு நினைவு படுத்தி, அந்த மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு ஒரு சிறந்த வழியினை ஏற்படுத்தி தந்துள்ளான். இது போன்ற தகவலை ஒருவன் சிந்திக்கும் போது, தான் அற்பமானவன், தன்னை இந்த அழகிய தோற்றத்தில் வடிவமைத்து படைத்தவன் மிக சக்தி உள்ளவன் என்ற உண்மையை புரிந்துகொண்டு, தன்னைப்படைத்த அல்லாஹ்வை அஞ்சி வாழ்வான். அதுவே அல்லாஹ்வின் விருப்பமாகும்.

ஒரு துளி வலைத்தளத்தில் நல பயன் உள்ள தகவல்கள், செய்திகள், உலக பார்வை, வரலாறுகள், கட்டுரைகள் போன்ற பதிவுகளை பகிருவுயிட இருக்கிறது.

0 comments:

Post a Comment